தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

இன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பெரும்பாலான நேரத்தை சீரியல்கள் தான் ஆக்கிரமித்துள்ளது. அந்த அளவுக்கு தொலைக்காட்சி தொடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட கதை பஞ்சங்களின் காரணமாக பல முன்னணி தொலைக்காட்சிகள் பிற மொழிகளில் வெற்றியடைந்த சீரியலை ரீமேக் செய்து தமிழில் ஹிட் கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது முன்னணி தொலைக்காட்சியும் சீரியல்களை ரீமேக் செய்ய களமிறங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன் யாரடி நீ மோகினி புகழ் சைத்ரா ரெட்டியும், ராஜா ராணி புகழ் சஞ்சீவும் புதிதாக உருவாகும் ரீமேக் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கன்னடத்தில் ஹிட்டான கஸ்தூரி நிவாஸா என்ற சீரியலை அந்த தொலைக்காட்சி ரீமேக் செய்து ஒளிபரப்ப உள்ளது.
இதில், பூவே பூச்சூடவா தொடரில் நடித்த கார்த்திக் வாசு ஹீரோவாகவும், பூவே உனக்காக சீரியலில் இரண்டாம் நாயகியாக நடித்திருந்த ஜோவிதா லிவிங்க்ஸ்டன் ஹீரோயினாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மூத்த நடிகை அம்பிகா நடிக்கிறார். இந்த சீரியலின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் தொடரின் ஒளிபரப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.