ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற அகிலன் சமீபத்தில் அந்த தொடரிலிருந்து விலகினார். சினிமாவில் நடிப்பதையே கனவாக கொண்ட அகிலன் மாடலிங் துறையில் நுழைந்து பின் சீரியலில் அறிமுகமானார். பாரதி கண்ணம்மா தொடரில் அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. இதன் மூலம் அகிலனுக்கு வெள்ளித்திரை கதவு திறந்தது. படங்களில் பிஸியாக நடித்து வரும் காரணத்தால் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி விட்டார்.
அகிலன் தற்போது விஷாலின் 'வீரமே வாகை சூடும்', 'பீட்சா 3', 'பகீரா' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பல போட்டோஷுட்களை நடத்தில் இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த புகைப்படங்களை பார்த்து இவர் விஜய் தேவரகொண்டாவுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.