''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
மிஸ்டர் சென்னை பட்டம் வாங்கிய நரேஷ் ராஜ் தற்போது சின்னத்திரை நாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார்.
வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத பலருக்கு தொலைக்காட்சி தனது இருகைகளை நீட்டி வரவேற்று வருகிறது. அந்த வகையில் மிஸ்டர் சென்னை பட்டம் வென்ற நரேஷ் ராஜ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அம்மன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். நரேஷ் ராஜ் அம்மன் தொடரில் கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த எபிசோடுகள் கலர்ஸ் தமிழ் சேனலில் ஏற்கனவே ஒளிபரப்பாக தொடங்கிவிட்டன.
அம்மன் தொடரில் நடிப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நரேஷ், 'நான் கபிலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். தயவு செய்து பாருங்கள். சீரியலுக்கு சப்போர்ட் செய்யுங்கள்' என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்றொரு பதிவில் அம்மன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இவரது சினிமா கனவு பலிக்குதா என்று பார்ப்போம்.