மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. 30க்கும் மேற்பட்ட படங்களையும் இயக்கியுள்ளார். அவருக்கும், அவருடைய முதல் கணவர் கிருஷ்ணமூர்த்திக்கும் பிறந்தவர் தெலுங்கு நடிகர் நரேஷ். விஜய நிர்மலா பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை மணந்து கொண்டார். கிருஷ்ணாவிற்கு அதற்கு முன்பாகவே இந்திரா தேவி என்பவருடன் திருமணம் நடைபெற்றுவிட்டது. அவர்களது மகன்தான் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு.
விஜய நிர்மலாவின் மகன் நரேஷ் திரையுலகத்தில் அறிமுகமாகி 50 வருடங்களாகிறது. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் என்ற விதத்தில் தமிழ் ரசிகர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்கும். நரேஷ் நான்கவதாக திருமணம் செய்து கொண்டவர் கன்னட நடிகை பவித்ர லோகேஷ்.
திரையுலகில் தன்னுடைய 50வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் சில்கூர் என்ற கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் சிறப்பு விருந்து ஒன்றை நடத்தினார். அதில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், நடிகை பூனம் தில்லான், தமிழ் நடிகைகள் ஜெயப்பிரதா, மேனகா, சுஹாசினி, குஷ்பு மற்றும் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
அதோடு “விஜயகிருஷ்ணா மந்திர் மற்றும் கட்டமனேனி இந்திரா தேவி ஸ்பூர்த்தி வனம்” என்ற பூங்காவையும் திறந்தார் நரேஷ். அந்தப் பூங்காவில் நடிகர் கிருஷ்ணா பற்றிய திரைப்பட நூலகம், மியூசியம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.