பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் |
ஜீ தமிழ் தொலைக்காட்சி தமது புத்தம் புதிய பிரைம் டைம் வெளியீடான நினைத்தாலே இனிக்கும் தொடரை முன்வைத்து ஆகஸ்ட் 23-ம் தேதியை ஸ்வீட்டேவாக கொண்டாடுகிறது
ஜீ தமிழ் தொலைக்காட்சி நினைத்தாலே இனிக்கும் என்ற புத்தம் புதிய தொடரை துவங்குவதாக அறிவித்துள்ளது. தன் வாழ்வில் லட்சியத்தை நோக்கி நடைபோடும் ஆற்றல் மிக்க ஒருபெண்ணின் கதையை தம் நேயர்களுக்கு சொல்ல வருகிறது இந்த தொடர்.
தென் இந்திய இனிப்பு பலகாரமான அதிரசத்தினை அசத்தலாக செய்வதில் கைதேர்ந்த, சமையல் கலை வல்லுனரான இளம் பெண் பொம்மி - மகிழ்ச்சியாக துருதுருவென சுயமாக இனிப்பக தொழில் செய்துதன் வாழ்வினை ரசித்து வாழ்கிறாள். ஆத்மார்த்தமான ஒரு சமையல் கலைஞரான பொம்மி, தினமும் சென்னையின் தெருக்களில் தனது இருசக்கர வாகனத்தில் வளம் வந்து அதிரசம் விற்று, தனது இனிப்பக வியாபாரத்தை வளர்க்க முயன்று வருகிறாள். எதிர்காலத்தில்'சொந்தமாக ஒரு பெரிய இனிப்பகத்தினை துவங்க வேண்டும்' என்கிற தனது தந்தையின் கனவை நனவாக்குவதை இலட்சியமாகக் கொண்டு உழைத்து வருகிறாள்.
ஒருபுறம், தனது கனவினை நனவாக்குவதற்கு சராசரி பெண்ணான பொம்மி கடினமாக உழைக்க, மறுபுறம் ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்த சித்தார்த் தனது படிப்பிற்கேற்ற பணியில் சிறந்து விளங்க விரும்புவதாக கதை நகர்கிறது. சில ஒற்றுமையான விஷயங்களால் அவர்கள் சந்திக்க நேர்ந்தாலும், அவர்களது நேரெதிர் குணாதிசயங்கள் தொடரின் நேயர்களுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தினை வழங்கும்.
கதாநாயகி 'பொம்மி' கதாப்பாத்திரத்தில் புதுமுகம் சுவாதியும், நாயகன் சித்தார்த் கதாபாத்திரத்தில் ஆனந்த் செல்வம் நடிக்கின்றனர். வரும் ஆகஸ்ட் 23, திங்கள் முதல் இரவு 7:30 மணிக்கு இந்த தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் கலாச்சாரத்தின் ஒரு நீங்க முடியாத அங்கமான இனிப்புகள் நம் குடும்பங்களுக்கிடையே அன்பை வெளிக்காட்ட வெகுகாலமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தொடரின் துவக்கத்தினை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகஸ்ட் 23-ம் தேதியை, ஸ்வீட்டே என்று தமிழகம் முழுவதும் கொண்டாட உள்ளது. பொம்மியின் இனிமையை ரசிகர்களுக்கு காண்பிக்கும் நோக்கில், இந்த தொடரின் கோலாகல ஆரம்பத்தினை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இனிப்பகங்களுடன் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு மாபெரும் முயற்சியினை மேற்கொண்டுள்ளது.
இதுப்பற்றி ஜீ தமிழின் ஈ.வி.பி மற்றும் சவுத் கிளஸ்டர் ஹெட், திரு. சிஜூ பிரபாகரன் கூறுகையில், “சமுதாயத்தின்அனைத்து தரப்பிலிருக்கும் நேயர்களின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவதே எங்களது ஒரே நோக்கம். அந்த அடிப்படையில் உருவான எங்கள் படைப்பான 'நினைத்தாலே இனிக்கும்' தொடரை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வலுவானகதை, புதுமுகங்கள் மற்றும் குடும்பங்களில் நிகழும் எதார்த்தமான நிகழ்வுகள் என பல அம்சங்களுடன் வரும் இத்தொடர், நிச்சயமாகஎங்கள் நேயர்களுக்கு இனிமை கலந்த எழுச்சி மிக்க ஒரு அனுபவத்தினை வழங்கும் என்று நம்புகிறோம்”, என்று தெரிவித்தார்.