உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் |

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத். இந்நிகழ்ச்சிக்கு பிறகு திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பை பெற்ற பிரகதி, பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இதற்கிடையில் பிரகதிக்கு படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. தாரை தப்பட்டை படத்தில் நடிகையாக அறிமுகமாக இருந்த பிரகதி, கல்லூரி படிப்பு காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின் சமீபத்தில் ஒரு அமெரிக்கன் காமெடி டிராமாவில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.
ஒரு கதாநாயகிக்கு இணையாக ஃபேன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள பிரகதி அடிக்கடி வீடியோக்களையும், போட்டோஷூட்களையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், நீச்சல் உடையில் கவர்ச்சியாக வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் பிரகதியின் அழகில் மயங்கி கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.