ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தொலைக்காட்சி நடிகை ரோஷினி பிரியன் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். எப்போதும் ஜாலியாக இருக்கும் ரோஷினி, சமூக வலைத்தளங்களிலும் துருதுருவென எதையாவது பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவ்வாறாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு விளையாட்டான வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், தனது சிறுவயது கனவு என கேப்ஷன் போட்டிருக்கும் ரோஷினி, ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது அங்கிருக்கும் பர்ச்சேஸ் ட்ரேயில் குழந்தை போல உட்கார்ந்து கொண்டு அதில் பயணம் செய்கிறார். இவரது இந்த குறும்புத்தனமான வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதை பார்க்கும் சிலர், ஒரு பெரிய மனுஷி பண்ணுற காரியாமா இது? என நக்கலாக கலாய்த்தும் வருகின்றனர்.