ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஜுலி. அதன் பின்பு விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலாவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டார். இது அவருக்கு நெகடிவ் இமேஜை உண்டாக்கியது. அதன் பின் தொடர்ந்து நெகடிவ் ட்ரோல்களை மட்டுமே சந்தித்து வரும் ஜுலி பெரிதாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் ஜுலி தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சென்ட்ராயனுக்கு ஜோடியாக ஆடி வருகிறார். அதில் சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு யார் மீது கோபம் இருக்கிறதோ அதை கூறி அங்கிருக்கும் பாக்சிங் பேக்கை குத்த வேண்டும் என சொல்லப்பட்டது.
அப்போது பேசிய ஜுலி, பிக் பாஸுக்கு பிறகு தான் ஒரு அழகி போட்டியில் நடுவராக சென்றதையும், அதில் ஒரு பெண்ணுக்கு பெஸ்ட் ஸ்மைல் என்கிற பட்டம் கொடுத்து மகுடம் அணிவிக்க சென்ற போது அந்த பெண் நீங்கள் எனக்கு மகுடம் அணிவிக்க வேண்டாம். அது எனக்கு அசிங்கம் என சொல்லி ஜூலியை மேடையிலேயே அசிங்கப்படுத்தியதையும் பற்றி கூறினார். அந்த பெண்ணை நினைத்து ஷோவில் தொங்கவிடப்பட்டிருந்த பாக்சிங் பேக்கை ஜுலி ஓங்கி குத்தினார்.