ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் நாயகி கதாபாத்திரத்தில் அறிமுகாமானார் ரேஷ்மா. இவர் அதே சீரியலில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று மதனும் ரேஷ்மாவும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். ஆறு மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் அறிவித்திருந்தனர். ஆனால், கோவிட் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், புதிய சீரியல் ஒன்றில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் நாயகனாக மதனும், நாயகியாக ரேஷ்மாவும் நடிக்கின்றனர்.
காதலை வெளியுலகிற்கு அறிவித்த பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் சீரியல் இதுதான். ரியலிலும் திரையிலும் ஜோடி சேர்ந்துள்ள மதன் ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.