ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

நடிகை தர்ஷா குப்தா திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை பார்த்து, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தொலைக்காட்சி நடிகையான தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். இவர் செந்தூர பூவே சீரியலிலும் வில்லியாக நடித்து வருகிறார். தர்ஷா குப்தா திருமண கோலத்தில் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அது உண்மையான திருமணம் அல்ல. திரௌபதி படத்தின் வெற்றிக்கு பிறகு மோகன் ஜி ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில் ரிச்சர்ட்க்கு ஜோடியாக ஹீரோயினாக தர்ஷா நடித்து வருகிறார். படத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தாவுக்கு திருமணம் ஆகும் காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் தர்ஷா பகிர்ந்துள்ளார்.
தர்ஷா குப்தா பகிர்ந்துள்ள வீடியோவும், புகைப்படமும் அவரது ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.