குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
கொரானோ தொற்று காலத்தில் தியேட்டர்கள் கடந்த வருடம் மூடப்பட்டதும் ஓடிடி தளங்களில் படங்களை நேரடியாக வெளியிடும் முறை வந்தது. அதோடு, டிவியிலேயே நேரடியாக படத்தை வெளியிடும் முறையும் அறிமுகமானது.
சன் டிவியில் தீபாவளிக்கு 'நாங்க ரொம்ப பிஸி', பொங்கலுக்கு 'புலிக்குத்தி பாண்டி' ஆகிய படங்களும் விஜய் டிவியில் கடந்த மாதம் 'ஏலே' படமும் டிவியில் நேரடியாக வெளியான படங்கள்.
அந்த வரிசையில் தற்போது 'சர்பத்' படமும் இணைய உள்ளது- பிரபாகரன் இயக்கத்தில் கதிர், சூரியா, ரகஸ்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் 2019ம் ஆண்டே வெளியாகி இருக்க வேண்டிய படம்.
'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த லலித்குமார், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கலர்ஸ் தமிழ் டிவியில்தான் தமிழ்ப் புத்தாண்டு ஒளிபரப்பாக 'சர்பத்' நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படி ஓடிடி தளங்களிலும், டிவிக்களிலும் படங்கள் நேரடியாக வெளியானால் தியேட்டர்களையே மக்கள் மறந்துவிடக் கூட வாய்ப்புள்ளது.