2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு |
சின்னத்திரையில் இருந்து ஏராளமானோர் சினிமாவுக்கு சென்ற கொண்டிருக்கிறார்கள். காமெடி நடிகர்களாக, ஹீரோக்களாக, குணசித்ர நடிகர்களாக படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து ஹீரோவாகி இருக்கிறார் தொகுப்பாளர் பப்பு.
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் பப்பு, ரிவ்யூ ராஜா, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிளில் பங்கேற்றிருக்கிறார். சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஏற்கெனவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் பப்பு இப்போது ஹீரோவாகி இருக்கிறார்.
பப்பு நடிக்கும் படத்தை வணக்கம் தமிழா மூவிஸ் சார்பில் சாதிக் தயாரித்து இயக்குகிறார். பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கியது டார்க் பேண்டஸி ஜானரில் இந்த படம் உருவாகிறது. படத்திற்கு கதை திரைக்கதை வசனம் ஜீவி படப் புகழ் பாபு தமிழ் எழுதி இருக்கிறார். பப்புவுடன் கன்னிமாடம் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் அஜய் வாண்டையார் ஆகியோரும் நடிக்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.