கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் 13 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய இளைஞர்களை கட்டிப்போட்டவர் அர்ச்சனா. அர்ச்சனாவின் துறுதுறு பேச்சும், மார்டன் உடைகளும் அன்றைய இளைஞர்களை மகுடிக்கு ஆடும் பாம்பாக மாற்றி வைத்திருந்தார் அர்ச்சனா.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு வந்தார். அங்கு கலக்க போவது யாரு, நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு அடுத்தடுத்து சேனல்களுக்கு மாறியவர் கடைசியாக ஜீ தமிழ் சேனலில் சரிகமபா இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
செம்பருத்தி, யாரடி நீ மோகினி தொடர்களில் நடித்தார். அப்படியே சினிமாவுக்கும் போனார். என்வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ், ஏண்டா தலையில எண்ணை வைக்கல, நான் சிரித்தால் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்திலும் நடித்துள்ளார்.
அதன்பிறகு திடீரென விஜய் டி.வியின் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். இப்போது விஜய் டி.வியின் ஆஸ்தான தொகுப்பாளினியாகவும் மாறுகிறார். விஜய் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் காதலே காதல் என்ற ரொமாண்டிக் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார். இது பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி. நட்சத்திர தம்பதிகளின் காதல் அனுபவங்களை கேட்டு அதை ரசிக்கும்படி தரப்போகிறார். கிட்டத்தட் இளைமை புதுமை நிகழ்ச்சி போன்றே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.