ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தென்னிந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் ராதிகா. சின்னத்திரையில் சீரியல் தொடங்கியபோது அதிலும் கால்பதித்து வெற்றி பெற்றார். நடிப்பு, தயாரிப்பு என இரு துறைகளிலும் சாதனை படைத்தார்.
சின்னத்திரையில் நடிப்பு மட்டுமின்றி தங்கவேட்டை, கோடீஸ்வரி போன்ற ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தினர். இவர் தயாரித்து நடித்த சித்தி தொடர் சின்னத்திரை உலகில் சாதனை படைத்தது. தற்போது சித்தி 2வில் நடித்து வருகிறார்.
ராதிகா சினிமாவில், சின்னத்திரையில் இருந்தாலும் அவ்வப்போது அரசியலிலும் தலைகாட்டுவார். திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தார். அந்த கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்துள்ளார். அவரது கணவர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த பிறகு அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். தற்போது அந்த கட்சியின் மகளிர் அணி தலைவியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதோடு வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் இருக்கிறார்.
தீவிர அரசியலில் குதிக்க இருப்பதால் ராதிகா, சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக போவதாக அறிவித்திருந்தார். தற்போது அதனை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியிருக்கிறார். சித்தி சீரியலில் நடிக்கும் கலைஞர்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோக்களை வெளியிட்டு சித்தியில் இருந்து விலகுவதை அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இப்போதைக்கு மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த மனநிலையில் சித்தி 2ல் இருந்து விலகுகிறேன். ஆனாலும் எனது கடின உழைப்பு இருந்து கொண்டே இருக்கும். அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களிடமிருந்தும், சக நடிகர், நடிகைகளிடமிருந்தும் விலகிச் செல்வது வருத்தமாக இருக்கிறது. இந்த தொடர் கவின், வெண்பா மற்றும் யாழினி ஆகியோருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தர வேண்டும். எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் தந்த நிபந்தனையற்ற அன்பு மற்றும் விசுவாசத்திற்கு நன்றி. தொடர்ந்து சித்தியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். என்று கூறியிருக்கிறார்.