ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இயக்குனர் கவுதம் மேனன் முதன்முறையாக சேர்ந்து பணிபுரியும் திரைப்படம் நீதானே என் பொன்வசந்தம். இந்தப் படத்தின் தலைப்பு இளையராஜா இசையமைத்த நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் முதல் வரியாகும். இசையால் இளைஞர்களை கட்டிப்போட்ட இளையராஜா இன்று இளைஞர்களுக்காகவும் திரைப்படம் இயக்கும் கவுதம் மேனனுடன் இணைந்திருக்கிறார். அவரது இசையமைப்பில் இடம் பெறும் பாடல்களைப் பற்றியும், அவை லண்டனில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விதம் பற்றியும் கவுதம் மேனனுடன் பகிர்ந்து கொள்கிறார், இளையராஜா. இந்த சிறப்பு பேட்டி சுதந்திர தினத்தன்று சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.