சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
முன்னணி நடிகர், நடிகைகள் இப்போது சின்னத்திரை பக்கமும், வெப்சீரிஸ் பக்கமும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள். விஷால், வரலட்சுமி, பிரசன்னா, சினேகா, என பலர் சின்னத்திரை பக்கம் ஒதுங்கி இருக்கிறார்கள். இப்போது அடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. முன்னணி தொலைக்காட்சியில் அவர் ஒரு நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இது தொடர்பான புரமோ வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
எல்லோருக்கும் வணக்கம், ரோட்ல போற யாராவது ஒருத்தர்கிட்ட உங்களுக்கு பிடிச்ச ஹீரா யாருன்னு கேட்டோம்னு வச்சக்குங்க சூப்பர் ஸ்டாரு, உலக நாயகன், தல, தளபதி, சின்னத் தளபதி, இளைய தளபதி, புரட்சி தளபதி, இளைய சூப்பர் ஸ்டார்னு சொல்வாங்க.
இல்லீங்க உங்க ரியல் லைபுல உங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஹீரோ யாருன்னு கேட்டால்.. எங்க அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி, தம்பின்னு சொல்வாங்க. கரெக்ட்தான...
ஆக்சுவலா சிலர் இருக்காங்க. நமக்கே தெரியாம, நம்ம கூடவே இருந்து, நமக்காகவே சிந்திக்கிற, நமக்கு நல்லது செய்ற பல நல்ல உள்ளங்கள் இருக்காங்க. அவுங்கள பற்றி தெரிஞ்சுக்கபோற இந்த கதையில அவுங்கதான் ஹீரோ. நான் ஹீரோ பிரண்டு.
சமூக பணிகள், சமூகத்துக்கான போராட்டங்கள் நடத்தும் இன்றைய இளைய சமூக ஆர்வலர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடும் நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று தெரிகிறது.