குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
சென்னை: விஜய் டி.வி. நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாடலிங் நடிகர் ஆரவ் தேர்வு செய்யப்பட்டார்.
விஜய் டி.வி. கடந்த ஜுன் மாதம் 25ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியை துவக்கியது. ஏற்கனவே வெளிநாடுகளிலும் வட மாநிலங்களில் பிரபலமாகி வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சியை முதன் முறையாக தமிழில் விஜய் டி.வி நடத்தியது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்பவர்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய விதி. இந்த நிகழ்ச்சியின் போது வாரம் ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள்.
போட்டியாளர்கள்:
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிகர் ஸ்ரீ, நடிகை அனுயா, காமெடி நடிகர் வையாபுரி, சினிமா நடன இயக்குநர் காயத்ரி ரகுராம், காமெடி நடிகர் பரணி, மாடலிங் நடிகை ரைசா, சினிமா பாடலாசிரியர் சினேகன், நடிகை ஓவியா, காமெடி நடிகை ஹார்த்தி, மாடலிங் நடிகர் ஆரவ், காமெடி நடிகர் கஞ்சாகருப்பு, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு புகழ்பெற்ற ஜுலி, நடிகர் கணேஷ் வெங்கட்ராம் , நடிகர் சக்தி, நடிகை நமிதா ஆகிய 15 பேர் கலந்து கொண்டனர்.
பரணி எஸ்கேப்
போட்டி ஆரம்பித்த முதல் வாரம் முதலே போட்டிகள் சூடு பிடிக்க துவங்கியது. உடல் நிலை காரணமாக நடிகர் ஸ்ரீ முதல் வாரத்திலேயே வெளியேறினார். 2வது வாரத்தில் வீட்டில் உள்ளவர்களால் ஓரங்கட்டப்பட்டதால் வீட்டின் சுவரை ஏறி குதித்து தப்பிக்க முயன்ற காமெடி நடிகர் பரணி போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.
சர்ச்சை:
தொடர்ந்து வீட்டில் இருந்த ஆரவ் - ஓவியா இடையே நடந்த காதல் விவகாரம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுப்பதாக பலதரப்பில் இருந்து புகார்கள் அளிக்கப்பட்டது. மேலும் பிக்பாஸ் வீட்டில் சினிமா நடன இயக்குநர் காயத்ரி ரகுமான் கேட்ட வார்த்தை பேசுவதாகவும், குறிப்பிட்ட வார்த்தை மூலம் ஒரு சமூத்தினரை தாழ்த்தி பேசவதாகவும் சர்ச்சை எழுந்தது.
ஓவியா வெளியேற்றம்:
இதற்கிடையில் வாரம் ஒரு பேட்டியாளர்கள் மக்கள் ஓட்டின் மூலம் வெளியேற்றப்பட்டு வந்தனர். இதற்கிடையில் நடிகை ஓவியாவிற்கு வீட்டில் பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்ததால் மன அழுத்திற்கு உள்ளாகி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரும் வெளியேற்றப்பட்டார். அதே நேரத்தில் அவர் ஒவ்வொரு முறையும் வெளியேற்றப்படும் நபர்களுக்கான பட்டியலில் சேரும் போது மக்களுக்களால் பெரும்பாலான ஓட்டுகள் போடப்பட்டு தொடர்ந்து வீட்டிலேயே காக்கப்பட்டு வந்தார்.
புது போட்டியாளர்கள்:
இதற்கிடையில் நடிகை பிந்து மாதவி, நடிகை சுஜா வருணி, காஜல் பசுபதி, மற்றும் நடிகர் ஹரீஸ் கல்யாண் ஆகியோர் இடையில் போட்டியில் வந்து சேர்ந்தனர். இதற்கடுத்து விறுவிறுப்பான நடந்த பல போட்டிகளும், வாரா வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் வெளியேற்றும் படலமும் நடந்தது.
கடைசி வாரம்:
கடைசி வாரத்தில் பாடலாசிரியர் சினேகன், மாடலிங் நடிகர் ஆரவ், நடிகர் ஹரீஸ் கல்யாண், நடிகை பிந்து மாதவி, நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் போட்டியாளராக இருந்தனர். நிகழ்ச்சி முடிவதற்கு இரு தனங்களுக்கு முன்பு நடிகை பிந்து மாதவி வெளியேற்றப்பட்டார்.
இறுதியாக நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் இருந்தனர்.
வெற்றியாளரானார் ஆரவ்:
இவர்களில் வெற்றியாளரை தேர்ந்தேடுக்கும் பைனல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சி தமிழக மக்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளானது. பைனல் நிகழ்ச்சியின் துவக்கத்தில் பழைய போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு அவர்கள் பழைய நியாபகங்களை நினைவு கூர்ந்தனர். இறுதியில் மக்களின் ஓட்டுக்கள் முலம் வெற்றியாளராக மாடலிங் நடிகர் ஆரவ் தேர்வு செய்யப்படதாக அறிவிக்கப்பட்டது.
70 கோடி ஓட்டுக்கள்:
சுமார் 100நாட்கள் நடந்த இந்த பிக்பாஸ் போட்டியை சுமார் 6.5 கோடிமக்கள் பார்வையிட்டதாகவும், மொத்தம் 70 கோடிக்கும் மேலான வாக்குகள் பொதுமக்களால் அளிக்கப்பட்டதாகவும். நடிகர் கமல் அறிவித்தார்.
வெற்றியாளரை அறிவிக்கும் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் வழக்கும் தன் பாணியில் தனது அரசியல் பிரவேசம் குறித்து நாசுக்காக பேசினார்.