யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் பெருமையாகக் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்காவில் வழங்கப்படும் இந்த விருதுகளை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் தங்களுக்கான மிகப் பெரும் அங்கீகாரமாக நினைக்கிறார்கள். 97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று(மார்ச் 3) நடைபெற்றது.
5 விருதுகளை அள்ளிய அனோரா
பாலியல் தொழிலாளி கதையை மையமாக வைத்து வெளியான ‛அனோரா' படம், சிறந்த படம், நடிகை, திரைக்கதை, இயக்குனர், எடிட்டர் ஆகிய 5 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.
விருதுகளை வென்றவர்கள் விவரம்…
* சிறந்த படம் - அனோரா
* சிறந்த நடிகர் - அட்ரியன் புரோடி (த ப்ரூட்டலிஸ்ட்)
* சிறந்த நடிகை - மிக்கே மேடிசன் (அனோரா)
* சிறந்த துணை நடிகர் - கியேரன் கல்கின் (எ ரியல் பெய்ன்)
*சிறந்த துணை நடிகை - ஸோ சல்டனா (எமிலியா பெரஸ்)
* சிறந்த இயக்குனர் - ஷான் பேக்கர் (அனோரா)
* சிறந்த ஒரிஜனல் திரைக்கதை - ஷான் பேக்கர் (அனோரா)
* சிறந்த தழுவல் திரைக்கதை - பீட்டர் ஸ்ட்ராகன் (கான்க்லேவ்)
* சிறந்த அனிமேட்டட் திரைப்படம் - ப்ளோ
* சிறந்த டாகுமென்டரி திரைப்படம் - நோ அதல் லேன்ட்
* சிறந்த சர்வதேசத் திரைப்படம் - ஐயாம் ஸ்டில் ஹியர் (பிரேசில்)
* சிறந்த படத்தொகுப்பு - ஷான் பேக்கர் (அனோரா)
* சிறந்த ஒளிப்பதிவு - லால் கிராலி (த ப்ரூட்டலிஸ்ட்)
* சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் - டேனியர் பிளம்பர்க் (த ப்ரூட்டலிஸ்ட்)
* சிறந்த புரொடக்ஷன் டிசைன் - விக்டு
* சிறந்த ஆடை வடிவமைப்பு - பால் டேஸ்வெல் (விக்டு)
* சிறந்த விஷுல் எபெக்ட்ஸ் - டுனே - பார்ட் 2
* சிறந்த ஒலி - டுனே - பார்ட் 2
* சிறந்த மேக்ப், ஹேர்ஸ்டைலிங் - பியர்ரே ஒலிவியர் பெர்சின், ஸ்டெபைன் கில்லான், மெரிலின் ஸ்கேர்செல்லி (த சப்ஸ்டன்ஸ்)
* சிறந்த ஒரிஜனல் பாடல் - எல் மால்….எமிலியா பெரஸ்
* சிறந்த லைக் ஆக்ஷன் ஷார்ட் - ஐயாம் நாட் எ ரோபோட்
* சிறந்த டாகுமென்டரி ஷார்ட் - த ஒன்லி கேர்ள் இன் த ஆர்க்கெஸ்ட்ரா
* சிறந்த அனிமேட்டட் ஷார்ட் - இன் த ஷேடோ ஆப் த சைப்ரஸ்