'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
டைரக்டர் பாரதிராஜா புதிதாக இயக்கியிருக்கும் தொலைக்காட்சி தொடருக்கு அப்பனும் ஆத்தாளும் என பெயரிட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சியில் 750 எபிசோடுகளுடன் நிறைவு பெற்றது, `தெக்கத்திப்பொண்ணு தொடர். பாரதிராஜா இயக்கத்தில் வெற்றி பெற்ற இந்த தொடரைத் தொடர்ந்து, மீண்டும் அவரது இயக்கத்திலேயே அப்பனும் ஆத்தாளும் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் நடிகை ரமா நாயகியாக நடிக்கிறார். இவர் `என்னுயிர்த் தோழன் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். தெக்கத்திப்பொண்ணு தொடர் போல, அப்பனும் ஆத்தாளும், கிராமத்து மனம் கமலும் தொடராக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் டைட்டில் பாடலுக்கு இசையமைக்க, நா.முத்துக்குமாரும் சிநேகனும் பாடல் எழுதியிருக்கிறார்கள்.