நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழ் சேனல்களில் அதிகம் இடம்பெறுவது ரியாலிட்டி நடன நிகழ்ச்சிகள்தான். ஜோடி நம்பர் ஒன், அடுத்த பிரபு தேவா யார், மானாட மயிலாட இப்படி நிறைய நிகழ்ச்சிகள். தற்போது ஜீ தமிழ் சேனல் ஒரு புதிய நடன நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப இருக்கிறது.
டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற இந்த நிகழ்ச்சியில் பல புதிய அம்சங்கள் இடம் பெற இருக்கிறது. அதில் முக்கியமான அம்சம் என்னவென்றால். நடன போட்டியில் வெற்றி பெறுகிற புதியவர்களுடன் நடிகர், நடிகைகள் இணைந்து ஆட இருக்கிறார்கள். முதல் சீசனில் ஆடுகிறவர் நடிகை பியா பாஜ்பாய். இந்த நிகழ்ச்சியை நடிகைகள் ராதிகா, சினேகா நடுவர்களாக இருக்க, நடிகர் தீபக்குமார் தொகுத்து வழங்குகிறார்கள். பிரமாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.