ரஜினி அடுத்த பட ரேசில் வினோத், அருண்குமார்! | சிவாஜி குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகர்! | சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால்? | பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? |
சின்னத்திரையில் நட்சத்திர செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பாத்திமாபாபு. அதன் பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்தார். அ.தி.மு.க.வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
பாத்திமா பாபுவின் அடுத்த அவதாரமாக அவர், இப்போது நாடக இயக்குனராகியிருக்கிறார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்த பாத்திமா, இப்போது தாலியா தகரமா என்ற காமெடி நாடகத்தை இயக்கி, அதில் ஹீரோயினாக நடித்தும் வருகிறார். இந்த நாடகத்தை சித்ராலயா ஸ்ரீராம் எழுதியுள்ளார்.
அடுத்து பாத்திமா சின்னத்திரையில் காமெடி சீரியல் ஒன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறார், சித்ராலயா ஸ்ரீராமுடன் சேர்ந்து இதற்காக கதையை உருவாக்கி வருகிறார். இதற்கு சரியான தயாரிப்பாளரையும் தேடிக் கொண்டிருக்கிறார். சினிமா காமெடி நடிகர்களுடன் சின்னத்திரை காமெடி நடிகர்களும் நடிக்கும் தொடராக இது இருக்கும் என்று தெரிகிறது.