சிங்கிளாக வரும் கூலி : ஏ சர்ட்டிபிகேட் பாதிப்பை தருமா...? | ‛அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...' என ஆரம்பித்து வைத்த ‛களத்தூர் கண்ணம்மா' : திரையுலகில் 66 ஆண்டில் நுழையும் கமல் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: பரத் அணி செயற்குழு உறுப்பினர்கள் வெற்றி | கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கும் ‛லோகா': ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகிறது | அமெரிக்க முன்பதிவில் 'கூலி' புதிய சாதனை | இரண்டு மொழிகளில் வெளியாகும் 'பர்தா' | அரசு வாகனத்தில் சொகுசு பயணம்: சர்ச்சையில் சிக்கிய நித்தி அகர்வால் | நீடிக்கும் ஸ்டிரைக் - அமைச்சர்களை சந்தித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே 'பராசக்தி' தலைப்புக்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக் : தமிழில் முதல் வண்ண படம் |
பிரபல தொழில் அதிபரும் காங்கிரஸ் பிரமுகருமான வசந்தகுமார் நடத்தி வரும் சேனல் வசந்த் தொலைக்காட்சி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் தம் பிடித்து நின்று கொண்டிருக்கிற டி.வி. சில தொடர்கள், பழைய பாடல்கள், தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. இப்போது வசந்த் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து 24 மணி நேர செய்தி சேனல் ஒன்று விரைவில் வர இருக்கிறது.
இதுபற்றி அதன் நிறுவனர் வசந்தகுமார் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் கட்சிக்கென தனி சேனல் கிடையாது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்தான் எனது சொந்தப் பணத்தில் இந்த சேனலை ஆரம்பித்தேன். லாபகரமாக இல்லாவிட்டாலும், கட்சிக்காகவும், ஆத்ம திருப்திக்காகவும் நடத்தி வருகிறேன். விரைவில் 24 மணி நேர செய்தி சேனல் ஒன்றையும் தொடங்க இருக்கிறேன்" என்கிறார் வசந்தகுமார்.