ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் | கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து | சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் தரும் தனுஷ்: அருண் விஜய் புகழாரம் | 7 வருடங்களுக்கு பிறகு கதை நாயகியாக நடிக்கும் ஆஸ்னா | மோகன்லாலுக்கு அக்., 4ல் விழா எடுத்து கவுரவிக்கும் கேரள அரசு | பிளாஷ்பேக்: சட்டசபையில் சர்ச்சையான 'தர்மபத்தினி' | மோகன்லாலின் ஜிம் பார்ட்னராக மாறிய திரிஷ்யம் பொண்ணு | பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி |
குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதன் பிறகு இங்கிலீஷ்காரன், யோகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இங்கிலீஷ்காரன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த பாலாஜியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மன்னன் மகள் என்ற சரித்திர தொடரில் இளவரசி விஷாலியாக நடிக்கிறார். தன்னை சுற்றி பின்னப்படும் சதிவலைகளில் இருந்து மீண்டு, தன்னைப் பற்றிய மர்மங்களை கண்டுபிடித்து நாட்டை காக்கிற முக்கியமான கேரக்டர்.
இதுபற்றி மதுமிதா கூறியதாவது: எனது முதல் சின்னத்திரை தொடர் இது. முதல் தொடரிலேயே மன்னன் மகளாக நடிப்பதில் மகிழ்ச்சி. பளபள உடைகள் அணிந்து, வாள் ஏந்தி, வீர வசனம் பேசி என எல்லாமே வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இப்பதான் ஆரம்பித்தது போல இருந்தது அதற்குள் 100 எபிசோட் கடந்து விட்டது. நடிப்பதற்கு நல்ல களம் இந்த சீரியலில் இருப்பதால் நானும் நின்று ஆடி வருகிறேன். விரைவில் நான் போடும் வாள் சண்டையையும் பார்க்க போகிறீர்கள் என்கிறார் மதுமிதா.