25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே |
பிரபல செய்திவாசிப்பாளர்களான பாத்திமா பாபு மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோர் இன்று(அக்., 28ம் தேதி) அதிமுக., கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். டி.வி. செய்திவாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பிறகு நடிகையாக பல படங்களில் நடித்து வந்தவர் பாத்திமா பாபு. தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தனியார் டி.வியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் இன்று தன்னை அதிமுக.வில் இணைந்து கொண்டார்.
இதேபோல், தனியார் டி.வி. ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் நிர்மலா பெரியசாமி. இவர் செய்தி வாசிக்கும் ஸ்டைலே மிகவும் தனியானது. அதிலும் அவர் வைக்கும் வணக்கம் ஏகபோக வரவேற்பை பெற்றது. தற்போது ஒரு தனியார் டி.வி.,யில் குடும்ப பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்த்துக் கொண்டு வருகிறார். இவரும் இன்று அதிமுக.வில் இணைந்து கொண்டார்.
முதல்வர் முன்னிலையில் இருவரும் அதிமுக.வில் சேர்ந்தனர். முதல்வர் ஜெயலலிதா, பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி ஆகியோருக்கு அதிமுக.,வின் உறுப்பினர் பதவிக்கான அட்டையை வழங்கினார்.