பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி |
செய்தி வாசிப்பாளரான நிர்மலா பெரியசாமி ஒரு காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியிருந்தார். தற்போது பிசினஸில் பிசியாக இருக்கும் நிர்மலா சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வபோது தலைக்காட்டி வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு கோடை இடி பட்டம் எவ்வாறு வந்தது? என்ற சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். நிர்மலா பெரியசாமி நான்காம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவாராம். இது அவருக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பள்ளியில் ஸ்மார்ட்டான மாணவியாக வலம் வந்த நிர்மலா படிப்பில் மட்டும் டாப் இல்லையாம் விளையாட்டு, மேடை பேச்சு, நாடகம் என அனைத்திலும் ஒரு கை பார்ப்பாரம். அப்படி ஒருமுறை மேடை நாடகத்தில் கர்ணன் வேடமிட்டு நடித்த போது மைக் இல்லாமலேயே வசனங்களில் வெளுத்து வாங்கினாராம். அதை பார்த்து அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் நிர்மலாவுக்கு கோடை இடி என்ற பட்டப்பெயரை கொடுத்துள்ளார். நாளடைவில் அந்த பெயர் பள்ளிகளிலும் பரவ கோடை இடி நிர்மலா என அனைவரும் அழைத்தனராம்.