சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

பிரபல நடிகை ஷகிலா சினிமாவில் பெண்கள் சிகரெட் புகைக்கும் காட்சி குறித்து சர்ச்சையான பதிலை கூறியிருக்கிறார். இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர். கவர்ச்சி நடிகையான ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் தமிழகத்தில் நல்லதொரு மரியாதையை பெற்று வருகிறார். ஆனாலும் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துகளை கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்கிறார். அந்த வகையில் அண்மையில், இயக்குநர் நவீன் குமார் இயக்கிய கடைசி தோட்டா புகைப்படத்தில் வனிதா புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்து ஷகிலாவிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஷகிலா, ''வனிதாவை தெய்வமா பாக்குறீங்களா? இல்ல குடும்ப பெண்ணா பாக்குறீங்களா? இவ்வளவு நாள் வனிதாவை குடும்ப பெண்ணா பாத்தீங்களா? இதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூடாதா?'' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நிரூபர் விஜய் சார் சிகரெட் பிடித்தாலே அதை பலரும் கண்டிக்கின்றனர். ஆணோ, பெண்ணோ சிகரெடி பிடிப்பதை திரைப்படத்தில் காட்டுவது தவறு என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அப்படியிருக்கையில் பெண்கள் சிகரெட் பிடித்தால் திட்டமாட்டார்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷகிலாவோ, ''திட்டினால் திட்டட்டும். அப்படியென்றால் தானே நாங்கள் பாப்புலர் ஆக முடியும்'' என பொருப்பில்லாமல் பதில் கூறியுள்ளார். ஷகிலாவின் இந்த சர்ச்சை மிகுந்த கருத்தானது நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.