'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல நடிகை பாவ்னி ரெட்டியும், சின்னத்திரை நடன கலைஞரான அமீரும் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் நட்பாக பழகி பின் காதலர்களாக மாறிய அமீர் - பாவ்னிக்கு ரசிகர்களின் ஆதரவும் இருந்து வருகிறது. தற்போது லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இருவரும் வருடா வருடம் காதலர் தினம் வரும்போதெல்லாம் ஜோடியாக போஸ்ட் போட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், திருமணம் குறித்த கேள்வி கேட்டால் மட்டும் மிக விரைவில் என்று சொல்கிறார்களே தவிர எப்போது என தெளிவாக சொல்வதில்லை. அந்த வகையில் இந்த வருட காதலர் தினத்தையொட்டியும் இருவரும் ஜோடியாக இருக்கும் கம்மிங் சூன் என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இது திருமணத்திற்கான அறிவிப்பா? அல்லது அவர் சேர்ந்து நடித்த பாடலுக்கான போஸ்டரா என்பது புரியாமல் ரசிகர்களே குழம்பி வருகின்றனர்.