பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி |
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அனைத்து மொழிகளிலும் ஹிட் அடிக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். அந்நிகழ்ச்சி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் டிஆர்பிக்கு குறைவில்லாமல் மக்களின் ஆதரவும் கிடைத்து வருகிறது. தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதேவேளையில் ஹிந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த முறை ஹிந்தி பிக்பாஸ் பேசு பொருள் ஆகியிருக்க காரணம் அதில் கலந்து கொண்ட தமிழ் போட்டியாளர் தான். குக் வித் கோமாளி மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸில் என்ட்ரி கொடுத்து விளையாடி வருகிறார். பல்வேறு பிரச்னைகளை தாண்டி தற்போது இறுதிவரை முன்னேறியுள்ள ஸ்ருதிகா, ஹிந்தி பிக்பாஸ் டைட்டிலை வெல்வாரா என்பது ரசிகர்களின் ஆசையாக மாறியுள்ளது. இதற்கிடையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகாவுடன் இணைந்து சேட்டைகள் செய்த குரோஷியும், புகழும் ஸ்ருதிகாவிற்கு ஆதரவாக ஓட்டு போட சொல்லி ரசிகர்களிடம் கேட்டு வருகின்றனர்.