‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

பிக்பாஸ் வீட்டில் விளையாடி வரும் சவுந்தர்யா அந்நிகழ்ச்சியிலேயே விஷ்ணுவிடம் லவ் புரொபோஸ் செய்தார். இதை பலரும் ஸ்கிரிப்ட் என சமூக வலைதளங்களில் எழுதி வரும் நிலையில், விஷ்ணு இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் கூறியதிலிருந்து, 'நானும் சவுந்தர்யாவும் நல்ல நண்பர்கள். அவருக்கு என்னை பிடிக்கும் என நண்பர்கள் மூலம் தெரியும். எனக்கும் அவரை பிடிக்கும். நான் முதலில் புரொபோஸ் செய்தால் எதுவும் நெகட்டிவ் ஆகிவிடக் கூடாது என பயந்தேன். எனவே, ஒரு நண்பனாக தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தேன். அதன்பின் நடந்ததெல்லாம் எதிர்பாராத ஒன்று. சிலர் இதை ஸ்கிரிப்ட், டிஆர்பி என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரு பெண் ஊரறிய ஒரு பையனிடம் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்பதை அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறோம். கொஞ்சநாள் காதலித்துவிட்டு விரைவிலேயே திருமணம் செய்து கொள்வோம்' என்று கூறியிருக்கிறார்.