குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் |
பிக்பாஸ் சீசன் 8ல் சின்னத்திரை பிரபலமான தீபக் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். சமீபகாலமாக பிக்பாஸ் வீட்டில் இவருடைய கேம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில சமயங்களில் விஜய் சேதுபதியிடமே துணிச்சலாக தனது கருத்தை சொல்லிவிடுகிறார். அதேசமயம் சிலர் தீபக் பாரபட்சமாக பழகுகிறார், பாகுபாடு காட்டுகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தமிழும் சரஸ்வதியும் தொடரில் அவருடன் இணைந்து நடித்த நக்ஷத்திரா தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், 'தீபக் உண்மையான ஜெண்டில் மேன். மனிதர்களை சமமாக பார்ப்பவர். எல்லோரையும் அவர் சமமாக தான் நடத்துவார். நான் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்துகள் சொல்லியது கிடையாது. ஆனால், தீபக் அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் இப்போது இதை கூறுகிறேன்' என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.