இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
சின்னத்திரை பிரபலமான மைனா நந்தினி சினிமா, வெப்சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் தன் கணவர் யோகேஷுடன் சேர்ந்து சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். அண்மையில் சொந்தமாகவே 'புள்ளத்தாச்சி' என்கிற வெப்சீரிஸை தயாரித்து தனது யூ-டியூபில் வெளியிட்டு வந்தார். இதுவரை 2 எபிசோடுகள் வரை ரிலீஸாகியுள்ள அந்த வெப்சீரிஸுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், புள்ளத்தாச்சி வெப்சீரிஸை கைவிடுவதாக நந்தினி - யோகேஷ் தம்பதியினர் அறிவித்துள்ளனர். அதற்கு காரணம் புள்ளத்தாச்சி வெப்சீரிஸுக்காக ஸ்ரீலங்கா சென்று அங்கு ஷூட்டிங் செய்துள்ளனர். ஆனால், ஷூட் செய்யப்பட்ட வீடியோக்கள் இருந்த ஹார்ட்டிஸ்க் கீழே விழுந்து டேமேஜ் ஆனதில் மொத்த வீடியோக்களும் டெலிட் ஆகிவிட்டதாம். இந்த வீடியோக்களை ரெக்கவர் செய்ய பல லட்சங்கள் செலவாகும் என்றும், ஆனால், சேமிப்பு பணம் முழுவதையும் ஸ்ரீலங்கா ஷூட்டிங்கிற்கே செலவு செய்துவிட்டதால் இனி புள்ளத்தாச்சி வெப்சீரிஸை தயாரிக்க முடியாமல் கைவிடுவதாகவும் இருவரும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.