சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நேத்ரன். கடைசியாக ரஞ்சிதமே தொடரில் நடித்து வந்தார். புற்றுநோய் காரணமாக சீரியலை விட்டு விலகிய அவர் கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.

நேத்ரனின் மனைவி தீபா ஆவார். இவர் பிரபல டிவி நடிகையாக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். தீபா தற்போது 'சிங்கப்பெண்ணே' உள்ளிட்ட தொடர்களில் நடிக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் அபிநயா, ‛கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப்சீரிஸில் நடித்தார். தனது தந்தை நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அபிநயா தான் சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாவில் அறிவித்தார். தொடர்ந்து தனது தந்தைக்கு மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றியும் பதிவிட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட சீரியல் நடிகர் வருண் உதய் மற்றும் கார்த்திக் சசிதரனுடன் டான்ஸ் ஆடியும், காமெடி ரீல்ஸ் செய்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் நேத்ரன். இந்நிலையில் அவரது மரண செய்தி சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.