வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சீசன் 1-ஐ கம்பேர் செய்யும் போது இந்த தொடருக்கு பெரிய வெற்றியில்லை என்றாலும் டிஆர்பியில் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஹேமா ராஜ்குமார், சரண்யா துராடி, ஷாலினி என ஏற்கனவே நாயகிகள் இடம் பெற்றிருக்க தற்போது சாய் ரித்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். தங்கமகள் சீரியலின் மூலம் ஏற்கனவே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள சாய் ரித்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருக்கு டிஆர்பியிலும் பெரிய முன்னேற்றம் கிடைக்குமென சின்னத்திரை வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது.