'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாக்கியலெட்சுமி சீரியலில் கோபி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் சதீஸ். பலவருடங்களாக திரையில் பயணித்து வரும் இவருக்கு பாக்கியலெட்சுமி தொடர் நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடியும், பாக்கியலெட்சுமி சீரியல் குறித்து பல அப்டேட்டுகளையும் கொடுத்து வந்த இவர் ஒரு சில முறை சீரியலை விட்டு விலகுவதாகவும், பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வர உள்ளதாகவும் கூறி இருக்கிறார். அப்படியிருக்க, 5 வருடங்களுக்கு மேல் ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலெட்சுமி தொடர் சமீபகாலங்களில் சற்று சுமாராக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அண்மையில் சதீஷ் வெளியிட்ட வீடியோவில் சீரியலின் முடிவு ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும் என்பது போல் கூறியிருந்தார். இதனையடுத்து சீரியலுக்கு எண்ட் கார்டு என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது சதீஷ் மற்றொரு வீடியோவில் தான் சொன்னதை தவறாக மக்கள் புரிந்து கொண்டதாகவும் தற்போதைக்கு சீரியல் முடிய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதைபார்த்து கடுப்பான ரசிகர்கள் 'என்னங்க இவரு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்கார்' என கலாய்க்கின்றனர்.