'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பேரன்பு சீரியலின் மூலம் ஹீரோயின் ஆன வைஷ்ணவியின் மார்க்கெட் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு விருது நிகழ்வில் பேசியபோது, தாயை போல வந்த தோழர் ஒருவர் தற்போது தன்னை தவறாக புரிந்து கொண்டு விலகிச் செல்வதாக வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேசமயம் வைஷ்ணவி மற்றும் அந்த நண்பரை பற்றி தெரிந்த சக ஆர்ட்டிஸ்ட்டுகள் கூறுகையில், அந்த பையன் மிகவும் அக்கறையோடு இருந்ததாகவும் வைஷ்ணவியின் குணம் தான் தற்போது மாறிவிட்டது என்றும் கூறியுள்ளனர்.