விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? |

சினிமா நடிகையான டெல்னா டேவிஸ் சின்னத்திரையில் 'அன்பே வா' தொடரின் மூலம் அறிமுகமானார். சின்னத்திரையில் அவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் 'ஆடுகளம்' என்கிற புதிய தொடரில் கமிட்டானார். இந்த தொடரில் டெல்லி கணேஷ், சச்சு, சல்மானுள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதமே இந்த தொடர் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அந்த தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
வயது மூப்பின் காரணமாக டெல்லி கணேஷ் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவர் நடித்த போர்ஷன்களுடன் தான் புரோமோ வெளியாகியுள்ளது. எனினும் சீரியல் ஒளிபரப்பாகும் போது டெல்லி கணேஷ் கதாபாத்திரத்தில் வேறு யாராவது மூத்த நடிகர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




