விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி | 73வது பிறந்தநாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவா! | விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல் | சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் |
'விடியும் வரை பேசு' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனவர் டெல்னா டேவிஸ். அதன்பிறகு பத்ரா, 49 ஓ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும், சில மலையாள படங்களிலும் நடித்தார். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'குரங்கு பொம்மை' படத்தில் நடித்தார். சின்னத்திரையில் பிசியான நடிகையாக இருக்கும் டெல்னா, ‛அன்பே வா, அபியும் நானும், கண்ணான கண்ணே, தாமரை' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார்.
தற்போது அவர் 'லவ் இங்க்' என்ற படத்தில் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார். ராஜ் அய்யப்பா ஹீரோ. இவர் தவிர யோகி பாபு, திலீபன், விடிவி கணேஷ், முனீஷ்காந்த், அர்ஷத், பட்டிமன்றம் ராஜா, வினோதினி, மாறன், சுபாஷினி கண்ணன், கேபிஒய் வினோத், க்மார்க் ஆண்டனிக் டிஎஸ்ஜி, மவுரிஷ் தாஸ், பிரீதா, வினோத் முன்னா நடிக்கின்றனர். ஏ.எஸ்.அர்ஜூனா ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு விஜய் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மேகராஜ் தாஸ் கூறியதாவது: தங்களுக்கு விருப்பமான நபரின் பெயரையோ அல்லது காதல் சின்னத்தையோ டாட்டூவாக வரைவதுதான் 'லவ் இங்க்'. இதன் இன்னொரு பக்கம் குறித்து சொல்லும் கதையுடன் உருவாகும் படம். அஜித் குமாரின் 'வலிமை', அதர்வா முரளியின் '100' உள்பட சில படங்களிலும், வெப்தொடர்களிலும் நடித்துள்ள ராஜ் அய்யப்பா ஹீரோவாக நடிக்க, அவரது ஜோடியாக 'குரங்கு பொம்மை' டெல்னா டேவிஸ் நடிக்கிறார்.
பக்கத்துவீட்டு பையன் மாதிரி ஒருவரை தேடினேன், ராஜ் அய்யப்பாவை பார்த்ததும், பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன். மேலும், 'அன்பே வா' டிவி சீரியலில் டெல்னாவின் நடிப்பைப் பார்த்து டெல்னாவை கதாநாயகியாகத் தேர்ந்தெடுத்தேன். ஹன்சிகாவைப் போன்ற மிகச்சிறந்த அழகான பெண் நாயகியை தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாகப் பார்க்க முடியவில்லை. என் படத்திற்கு அப்படிப்பட்ட ஒரு பெண் நாயகி தேவைப்பட்டார், அதற்கு டெல்னா பொருந்தினார். அதனால் அவரை தேர்வு செய்தேன். என்றார்.