இனியா குழுவினருக்கு நன்றி சொன்ன ஆல்யா! | ‛செஸ்' ஆனந்த் வரலாற்று படம் : ஏ.எல்.விஜய் இயக்குகிறார் | பிளாஷ்பேக்: கமல், ரஜினி இருவரும் இணைந்து நடிக்க திட்டமிட்ட ஏ வி எம் | பிளாஷ்பேக் : சிவாஜி வீட்டில் சிவாஜி இயக்கிய படம் | சீக்கிரம் நடிக்க வாங்க லாவண்யா! | பையனூர் திரைப்பட நகரம் : அமைச்சர்களுடன் தயாரிப்பாளர்கள் ஆலோசனை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'கருடன்' | அமெரிக்கா - சிவகார்த்திகேயனின் முதல் 'மில்லியன் டாலர்' வசூல் | ஏர்போர்ட்டில் வைத்து திட்டுகிறார்கள் - அணிலா வருத்தம் | இட்லி கடை படத்தை பார்த்த ஜி.வி.பிரகாஷ் |
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்களான கிறிஸ் வேணுகோபால் மற்றும் திவ்யா ஸ்ரீதர் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். 'பத்தரைமாற்று' என்கிற நெடுந்தொடரில் ஒன்றாக நடித்த போது கிறிஸ் வேணுகோபாலுக்கும் திவ்யாவுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதில் கிறிஸ் வேணுகோபாலின் வயதான தோற்றத்தை வைத்து இந்த வயதில் இவருக்கு திருமணம் தேவையா என பலரும் நெகட்டிவ் ஆக கமெண்டுகள் செய்து வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திவ்யா, 'நாங்கள் திருமணம் செய்தால் கமெண்டுகள் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு மோசமாக வரும் என எதிர்பார்க்கவில்லை. பலர் அவரது வயதை 60 என்கின்றனர். உண்மையில் அவருக்கு வயது 49 தான். எனக்கு 40.அப்படியே அவர் வயது 60 என்றாலும் அவருடன் 40 வயதுள்ள நான் சேர்ந்து வாழ்வதில் என்ன பிரச்னை இருக்கிறது. நாங்கள் செக்ஸுக்காக திருமணம் செய்யவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார்.