ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
குக் வித் கோமாளி சீசன் 5-ல் தொகுப்பாளராக களமிறங்கிய மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக விலகியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் காசு பணத்தை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என கூறியுள்ளார். அவரது பதிவில், 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நான் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறேன். காசு, பணம், புகழை விட சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். எனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன். இந்நிகழ்ச்சி மற்றொரு பெண் தொகுப்பாளினியால் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
குக்காக வந்த ஒருவர் தான் குக் என்பதை மறந்துவிட்டு என்னுடைய ஆங்கரிங் வேலைகளில் தலையிட்டு வருகிறார். நிறைய அடக்குமுறைகளால் இந்நிகழ்ச்சி அதன் அசல் தன்மையை இழந்துவிட்டது. முன்பு நான் பார்த்து, ரசித்து மகிழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவல்ல' என பல தகவல்களை கூறியிருக்கிறார். சீசன் 1 முதல் தற்போதுவரை குக் வித் கோமாளியின் அனைத்து சீசன்களிலும் பங்கேற்றிருந்த மணிமேகலை இப்படி அதிரடியாக விலகியிருப்பதால் ரசிகர்களும் சோகமடைந்துள்ளனர்.