'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல நடிகரான பிருத்விராஜ் என்கிற பப்லு பல வருடங்களாக சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன் ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் ஜோடியாக பல பேட்டிகளில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய பிருத்விராஜ், 'நான் எப்போதும் வெளிப்படையா இருப்பேன். நீங்க கிண்டல் பண்ணுவீங்கன்னு நான் உண்மைய சொல்ல தயங்கல. நான் ஒரு விஷயத்த சொன்னா ஒரு 10 பேர் நல்ல விதமா எடுத்துக்கிறாங்க, 10 பேர் கழுவி ஊத்துவாங்க. அதனால எனக்கும் ஷீத்தலுக்கும் இருக்கும் பிரச்னையை வெளிப்படையாக பேச விரும்பல. நான் நிறைய ஏமாந்துட்டேன். இப்ப சரியான பாதையில போய்ட்டு இருக்கேன். இனி என்னை மட்டுமே கவனிக்க போறேன். இனியும் திருந்தலைன்னா நான் முட்டாள்' என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.