ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
பிரபல சின்னத்திரை நடிகையான ராணி.ஒரு காலக்கட்டத்தில் வில்லி கதாபாத்திரங்களில் கொடிக்கட்டி பறந்தார். இப்போது போலீஸ் கேரக்டர் என்றாலே ராணி தான் என்கிற அளவுக்கு பல தொடர்களில் போலீஸாக நடித்துள்ளார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சோகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ராணி படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது அம்மா இறந்துவிட்டாராம். அக்கா, தங்கைகள் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் போதே ராணிக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்களாம். அதன்பிறகு அவருக்கு மகன் பிறக்க, சீரியலில் நடிக்க வந்த ராணி இன்று வரை தன் குடுபத்திற்காக உழைத்து கொண்டிருக்கிறார். அதேசமயம் அவரது அப்பா ராணியின் வளர்ப்பு, படிப்பு, திருமணம் என எதையுமே பார்க்கவில்லை என மிகவும் சோகமாக பேசியுள்ளார். இது தான் ராணி தன் வாழ்வில் சந்தித்த மிகப்பெரிய சோகம் எனவும் கூறியுள்ளார்.