அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வெள்ளித்திரை நடிகையான டெல்னா டேவிஸ் தமிழ் சினிமாவில் குரங்கு பொம்மை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனாலும், அதன்பிறகு திரைப்படங்கள் எதிலும் அவர் நடிக்கவில்லை. பிறகு டிவியில் அன்பே வா தொடரில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அந்த சமயம் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சினிமாவில் தொடர்ந்து நடிக்க விருப்பமில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், அன்பே வா சீரியலிலிருந்து விலகிய டெல்னா டேவிஸ் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு 'லவ் இங்' என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த மகிழ்ச்சியினை இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.