பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே | பிளாஷ்பேக்: இலக்கிய தமிழில் உரையாடல் இருந்தும் இலக்கைத் தவறவிட்ட “துளி விஷம்” | மாதவனின் டெஸ்ட் போட்டி ரசிகர்களை ஈர்க்குமா? | ஒரு வருடத்திற்குப் பிறகு ஓடிடியில் 'லால் சலாம்' | திரையரங்கை தொடர்ந்து ஓ.டி.டி.,க்கு வரும் பெருசு | குட் பேட் அக்லி முதல் காட்சி எப்போது? : சிறப்பு காட்சிக்கு அனுமதி உண்டா | சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது |
சின்னத்திரையில் சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி ஷோக்களிலும் செடின்மென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து டிஆர்பியை அள்ளி வருகின்றன தொலைக்காட்சிகள். மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஜீ தமிழ் நிகழ்ச்சியான சரிகமப நிகழ்ச்சியில் சென்ற வாரம் தந்தை - மகள் பாசப்போராட்டம் டிரெண்டான நிலையில், இந்த வாரம் தாய் - மகன் பாசப்போராட்டம் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ள போட்டியாளரான ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டி டெடிகேஷன் ரவுண்டில் என்ன பெத்த ஆத்தா என்கிற பாடலை தனது அம்மாவுக்காக பாடி அசத்தினார். அதன்பின் பேசிய அவர், தனது அம்மா தங்களுக்காக ஸ்கூலில் கக்கூஸ் கழுவி ஆயா வேலை பார்த்ததாகவும் இருந்தாலும் தாங்கள் அப்போதெல்லாம் வெகுநாட்கள் பட்டினி கிடந்ததாகவும் மேடையில் கூறினார். மேலும், தனது அம்மா பட்டுப்புடவை கட்டியதே இல்லை என்று கூறிய வீரபாண்டி தன் தாய்க்காக பட்டுப்புடவை வாங்கி கொடுத்தார். இந்த சம்பவத்தை பார்த்து நெகிழ்ந்து போன சைந்தவி, வீரபாண்டியின் அம்மாவை நடுவர்களுக்கு அருகில் அமர செய்து கவுரவப்படுத்தினார்.