2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

சின்னத்திரையில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. சரவணன் மீனாட்சி தொடர் ரச்சிதாவுக்கு மிகப்பெரிய புகழையும் மார்க்கெட்டையும் பெற்று தந்தது. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா, இப்போது வரை எந்தவொரு புராஜெக்டிலும் கமிட்மெண்ட் கொடுக்கவில்லை. ஆனால், போட்டோஷூட்களில் டிரெடிஷ்னல், மாடர்ன் என அனைத்து உடைகளிலும் அழகிய பதுமையாக ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ''ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் ஆண்கள் 5 நிமிடத்தில் கிளம்பிவிடுவார்கள். ஆனால், பெண்களுக்கோ 30 நிமிடங்கள் வரை ஆகும். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தங்களது உடை மற்றும் தோற்றத்திற்காக அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது'' என்று பேசியுள்ளார்.