சித்தார்த் கைவசம் 8 புதிய படங்கள் | ‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இரண்டாவது பாகமும் மக்களிடம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் பாகத்தில் ஜனார்த்தனன் கதாபாத்திரத்தில் நடித்த ரவிச்சந்திரன் மீண்டும் அதே ஜனார்த்தனன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் சீசனில் இவருக்கான அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இரண்டாவது சீசனில் இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி காட்சிகள் இதுவரை இல்லை. இதனால், பலரும் ரவிச்சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 வை விட்டு விலகிவிட்டாரா? என கேட்டு வந்தனர்.
அண்மையில் பேட்டியளித்துள்ள ரவிச்சந்திரன், 'என்னுடைய கேரக்டருக்கு இனிமேல் தான் முக்கியத்துவம் இருக்கிறது. கூடிய விரைவில் என்னுடைய காட்சிகளை பார்ப்பீர்கள். சீசன் 2 வில் என்னுடைய நடிப்பு வித்தியாசமாக இருக்கும். முதல் பாகத்தில் ஏற்றுக் கொண்டது போலவே இந்த முறையும் ஜனார்த்தனனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்' என்று கூறியுள்ளார்.