செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி தொடரில் நடித்து பிரபலமான நடிகை நக்ஷத்திரா, திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிக்காமல் இருந்தார். கடந்த வருடம் நக்ஷத்திராவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தற்போது மீண்டும் சீரியல் நடிக்க தொடங்கியுள்ளார். செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர், சிவான்யா ப்ரியங்கா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் வில்லி கதாபாத்திரம் திருந்திவிட்டது போல் கதையை நகர்த்தி வருகின்றனர். அதேசமயம் புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திரா ஹீரோயினுடன் போட்டியிடும் ரோலில் அறிமுகமாகிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியான நிலையில் நீண்ட நாட்கள் கழித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் நக்ஷத்திராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.