சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரை யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து பிரபலமானார். தவிர திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் வெயில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், செய், கொலை ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. யாரடி நீ மோகினி தொடருக்கு பின் சீரியல் எதிலும் கமிட்டாகமல் இருந்த யமுனா, தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசல் படி என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்த சீரியலின் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் யமுனாவின் எண்ட்ரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.