குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்ரியா. தொடர்ந்து பொன்னூஞ்சல், வாணி ராணி, கல்யாண பரிசு ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். இவருக்கு ‛மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம் வென்ற அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால், திருமணமாகி ஒரு வருடத்திலேயே அரவிந்த் இருதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த பெருந்துயரை மெல்ல மெல்ல கடந்து வந்த ஸ்ருதி, தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் ‛லெட்சுமி' சீரியலில் நடித்து வருகிறார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதியின் கம்பேக்கை பாராட்டி வருகின்றனர்.