குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே விஷால். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எழில் என்கிற கதாபாத்திரத்தில் அம்மாவிற்கு செல்லப்பிள்ளையாக பாக்கியாவின் மகனாக கலக்கி வரும் விஷால் தற்போது தனது உண்மையான அம்மா இவர் தான் என இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டுள்ளார்.
விஷால் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, எழுத்தாளர் பிரியாதம்பி தான். இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பகல் நிலவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களின் கதாசிரியர் ஆவார். தற்போது பாக்கியலெட்சுமி தொடரையும் இவர் தான் எழுதி வருகிறார். இதைத்தான் சூசகமாக சொல்லும் வகையில் எழில் கதாபாத்திரத்தை உருவாக்கிய நிஜ அம்மா என விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.