நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி, ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் சரண்யா நடித்து வரும் தங்கமயில் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்த போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டுமா? என யோசித்ததாகவும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி பாராட்டுகள் கிடைத்து வருவதாகவும் அண்மையில் அளித்த பேட்டியில் சரண்யா கூறியிருக்கிறார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது அதற்காக கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருக்கிறார்.